சமையல் சந்தேகங்கள்:
*************************
சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது சாதமும்
பருப்பும் நன்கு குழைந்து வெந்த பிறகுதான்
வெல்லம் சேர்க்க வேண்டும். ஆரம்பத்திலேயே வெல்லம் சேர்த்துவிட்டால் சாதமும் பருப்பும் வேகாது.
*********
கீரையை நறுக்கிய பிறகு பாத்திரத்தில் உப்பு சேர்த்து வேக வைத்தால் சமைத்த பிறகு நிறம் மாறாது.
**********
காய்களை நறுக்கி வாணலியில் எண்ணெய் சுட்டபிறகு மாவு பிசைந்து பஜ்ஜி போட்டால் எண்ணெய் அதிகம் குடிக்காது.
*************
பருப்பு வகைகளை ஊறியபின்பு அரைப்பதற்கு முன்பு ஒரு பிடி பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை அரைத்த பருப்புடன் கலந்து வடை தட்டினால் மொறுமொறுன்னு கரகரன்னு சூப்பரா வரும்.
***********
சமையல் டிப்ஸ் வழங்கியவர்;
மல்லிகா பத்ரிநாத்
