காற்றில் வரும் கீதம்

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய்க் குழலில் அழகாக……..
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா? )

பசு அறியும் அந்தச் சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும்ஒரு அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே
(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா? )

ஆதார ஸ்ருதி அந்த அன்னை அன்பே
அதுக்கேற்ற லயம் என் தந்தை அன்பே
ஸ்ருதி லயங்கள் தன்னைச் சுற்றும்ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் எது சொல் தோழி
(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

 

வரிகள்: கவிஞர் வாலி
குரல்:
இளையராஜா, ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல், பவதாரிணி, சாதனா சர்கம்

இசை: இளையராஜா
படம்: ஒரு நாள் ஒரு கனவு

மறுமொழியொன்றை வழங்குக