எண்ணச்சங்கிலி…..
அழகை ரசிப்பதுண்டு
நாம் – அது ரசிக்கத்தக்கதாய்
இருக்கும் வரைதான்…
பெண்ணே,
இளமை கூட உன் வாழ்வில்
இருக்கும் வரைதான் – உன்
அழகு கூட இந்த உலகில்
விற்கப்படும்…
நம்பிக்கை கூட உன் மனதில்
இருக்கும் வரைதான் – உன்னாலும்
முடியும் என்று இந்த
உலகம் நம்பக்கூடும்…
முடியாது என்று இல்லை
உன்னால் – உன் மேல்
பூட்டப்பட்டிருக்கும் சங்கிலிதான்
உன் முன்னேற்றத்திற்கு தடை…
வேறொன்றுமில்லை பெண்ணே!
அது உன் மனதை
ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்
எண்ணச் சங்கிலி – அதை
கழற்றியெறி – பிரகாசமான
வாழ்வு காத்திருக்கிறது
உன் கண் முன்னில்…
நன்றி;
http://pookkal.venkatt.in/2007/11/01
