1. உங்க தலைவலிக்கு கண்ணாடி போட்டா சரியா போயிடும்.
அப்படியா… என் பொண்டாட்டி ஏற்கனவே கண்ணாடி போட்டிருக்கா டாக்டர்.
2. இந்த புதுப்படம் நூறு நாள் ஓடுச்சா?
ஆமா.. இதுவரைக்கும் நூறு தியேட்டர்ல ஒரு நாள் ஓடிச்சு.
3. உங்க ஜாதகத்துல சூரியன் உச்சத்துல இருக்கான்.
அதை வெறுமனே சொல்லக்கூடாதா..? இப்படி 12 மணி வெயில்ல உட்கார வெச்சு சொல்லணுமா?
4. டிவி சீரியல்ல நடிக்கணும்கறியே… முன் அனுபவம் இருக்கா?
இதுக்கு முன்னாடி ரப்பர் கம்பெனியில வேலை பார்த்திருக்கேன் சார்.
| source:http://tamil.sify.com/general/fullstory.php?id=13258438&t=Jokes |
