பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
பார்வையிலே படம் புடிச்சு
பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
மனசுக்குள்ளே தேரோட்ட
மைவிழியில் வடம் புடிச்சான்
மருக்கொழுந்து வாசத்திலே
மாந்தோப்பில் வழி மறிச்சான்
மாந்தோப்பில் வழி மறிச்சு
மயக்கத்தையே வரவழைச்சான்
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
பார்வையிலே படம் புடிச்சு
பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
தைமாசம் தாலி கட்ட
மார்கழியில் கையை புடிச்சான்
யமுனையிலே வெள்ளமில்லை
விடியும் வரை கதைபடிச்சான்
விடியும் வரை கதை படிச்சு
முடியாமல் முடிச்சு வைச்சான்
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
பார்வையிலே படம் புடிச்சு
பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
ஊரெல்லாம் உறங்கிவிடும்
உள்ளம் மட்டும் உறங்காது
ஓசையெல்லாம் அடங்கிவிடும்
ஆசை மட்டும் அடங்காது
ஆசை மட்டும் அடங்காமல்
அவனை மட்டும் நினைத்திருப்பேன்
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
பார்வையிலே படம் புடிச்சு
பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
ஆஹ்ஹா ஒஹ்ஹோ ..
(கேட்டு ரஸித்த சினிமா பாடல்)
