|
தாலாட்டில் கொஞ்சும் தமிழ் |
|
|
. |
|
|
|
|
|
. |
|
|
பிள்ளைத்தமிழ் என்ற சிறு நூல் வகை தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் 10 பருவங்களில் தாலப்பருவமும் ஒன்று. இந்த தாலப்பருவத்திற்கு ஏற்ற பாட்டு தாலாட்டு ஆகும். இலக்கியமாக்கியவர்கள் ஆழ்வார்கள்தான். அவர்கள் கண்ணனைக் குழந்தையாக கருதித் தாலாட்டினார்கள். கிராமப்புறங்களில் படிப்பறிவில்லாத தாய்மார்களின் தாலாட்டிலும் தமிழின் இனிமையையும், சிறப்பையும் நாம் காணலாம். |
|
|
. |
|
| மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய பாண்டிய நாட்டு சீமையில் வழங்கப்படும் தாலாட்டு பாட்டில் தமிழின் இனிமை மட்டுமல்லாமல் எதுகை, மோனை உள்ளிட்ட சிறப்புகளும் தென்படும்.
ஆரடித்தார் ஏனழுதாய் அடித்தாரைச் சொல்லி அழு கண்ணே, என் கண்மணியே கடிந்தாரைச் சொல்லி அழு கொப்புக்கனியே, கோதுபடா மாங்கனியே வம்புக்கழுதாயோ, வாயெல்லாம் பால் வடிய மாமன் அடித்தாரோ மல்லிகைப்பூ செண்டாலே அத்தை அடித்தாளோ அல்லிப்பூ செண்டாலே அடித்தாரைச் சொல்லி அழு ஆக்கினைகள் செய்து வைப்போம் தொட்டாரைச் சொல்லி அழு தோள் விலங்கு போட்டு வைப்போம் ஆரும் அடிக்கவில்லை, ஐவிரலும் தீண்டவில்லை அவனா அழுகின்றான் ஆத்தாள் மடிதேடி தானா அழுகின்றான் தம்பி துணை வேணுமென்று இந்த தாலாட்டுப் பாடல் அழுகின்ற குழந்தையை சமாதானப்படுத்தும் வகையில் தாயார் பாடுவது போல அமைந்துள்ளது. மெல்லிய மல்லிகைப்பூ, அல்லிப்பூவால் அடித்தால் கூட கன்றிப்போகும் மென்மையான தேகம் கொண்ட குழந்தை அது என்றும், மலரால் அடித்தவர்களை விலங்கு போட்டுக் கடுமையாகத் தண்டிப்போம் என்று தாயார் சமாதானப்படுத்துகிறாள் என்றும் வெளிப்படும் பாடலின் நயம் வியந்து பாராட்டத்தகுந்ததாம். யாரும் அடிக்கவில்லை பசியால்தான் குழந்தை அழுகிறது என்று கூறும் தகப்பன், தனது இச்சையையும் அங்கே நாசூக்காக பதிய வைக்கும் நயத்தையும் இப்பாடலில் காணலாம். |
|
Source: http://www.maalaisudar.com/staticpage.php?id=1378§ion=25&%20catid=78
