| சேலத்துக்காரருக்கு காந்திஜியின் தண்டனை! | |
| தமிழ்நாட்டின் ஒரு மாவட்டச் செயலாளர் சேலத்துக்காரர். தனது ஒரே மகள் திருமணத்தின் போது செலவுக்குப் பணம் போதாமையால் காங்கிரஸ் கட்சி நிதியிலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்துச் செலவழித்துவிட்டார். (பின்னால் கொடுத்து விடலாம் என்று). காங்கிரஸ் கட்சி அவரை கட்சியிலிருந்து நீக்கி விட்டது. உடனே அவர் யாரிடமோ கடன் வாங்கி வார்தாவுக்குச் சென்று காந்திஜியிடம் தன்னை மன்னித்தேன் என்று சொல்லுங்கள் என்று கெஞ்சினார்.
“மன்னிக்க முடியாது. மன்னிக்க மாட்டேன்” என்று காந்திஜி உரத்த குரலில் சொல்லி விட்டார். ஆசிரமத்தைத் தேடி வந்த அந்த விருந்தாளியை யாரும் சாப்பிடக் கூட அழைக்கவில்லை (காந்தி சொன்னால் தான் அழைப்பார்கள்) காந்தியை சாப்பிட அழைத்தார்க்ள. சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி விட்டார் அன்று உபவாச தினமும் அல்ல. காந்திஜியுடன் இருந்த சி.எப். ஆண்ட்ரூûஸ சாப்பிடப் போகச் சொன்னார். ஆனால் அவர் போகவில்லை. “வார்தா வருவதற்கு மட்டும் கடன் வாங்கி வந்தேன்” என்றார் அந்த சேலத்துக்காரர். “நடந்தே போ, அதான் உனக்கு தண்டனை” என்றார் காந்திஜி கண்டிப்பாக! ஆண்ட்ரூஸ் அந்த சேலத்துக்காரரை ஜாடை காட்டி தன்னுடன் வரும்படி அழைத்து தனக்கு எடுத்து வைத்திருந்த சாப்பாட்டை அவருக்கு கொடுத்து உண்ணச் சொன்னார். அவரை ரயில் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு போய் சேலத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்பினார். ஒரு குற்றவாளியைப் போல ஆண்ட்ரூஸ் காந்திஜி முன் நின்றார். “பாபுஜி” என்று அழைத்தார். மெல்லிதாக நூல் நூற்பிலிருந்து முகத்தைத் திருப்பாமலேயே “சொல்லு” என்றார். “அந்த ஆளுக்கு நான் சாப்பாடு பண்ணி வைத்து சேலத்துக்கும் ரயில் டிக்கெட் என் செலவில் வாங்கித் தந்தேன் பாபு” என்றார் தயங்கித் தயங்கி. “நமது குழந்தைகள் என்றுமே குழந்தைகளாக இருப்பதில்லை. ஆனால் பெற்றோர்தான் என்றுமே பெற்றோராக இருக்கிறார்கள்!” “தெரியும் நீ அப்படிச் செய்வாய் என்று” எனச் சொல்ல புன்னகையுடன் பார்த்தார் மகாத்மா. அன்று இருவரும் சாப்பிடவில்லை! யாரோ ஒரு சேலத்துக்காரன் செய்த பிழைக்காக இரண்டு மகாத்மாக்கள் தங்களை ஏன் வருத்திக் கொள்ள வேணும்?
source:tamil.sify.com |
|
சேலத்துக்காரருக்கு காந்திஜியின் தண்டனை
ஜூலை 18, 2008 இல் 4:26 மு.பகல் (நிகழ்வுகள்)
Tags: Add new tag, நிகழ்வுகள்
