கீரைகளின் பலன்கள்

பசலைக்கீரை, முடக்கத்தான் & காசினிக் கீரை

பசலைக்கீரை - குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக் கூடாது.

நீரைப் பெருக்கும். பால் சுரக்கும்.

வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும். இதை உபயோகிப்பதால் உடல் தொற்று பெருமளவில் தடுக்கப் படுகிறது.

வைட்டமின், கால்ஷியம் அதிக அளவு ஹீமோகுளோபின், புரதம் செறிந்த கீரை.

அதிக அளவில் B காம்ப்ளெக்ஸ் இருப்பதால் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து.

முடக்கத்தான்: ( மொடக்கத்தான்)
பெயரிலேயே இருக்கிறது- முடக்கு வாதத்திற்கு மிகவும் நம்பக்கூடிய இயற்கை உணவு.

இந்த கீரையில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது.

மூட்டுவலி, எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

எலும்புகளுக்கு இடையில் உள்ள திசுக்களுக்கு வலு தரும்.

வாயு, வாதத்தினால் வரும் வாத வீக்கம்,வலி, குடைச்சல் இவற்றை போக்கும்

காசினிக் கீரை – அஜீரணம், வயிற்றுப் புண், வாய்வுத் தொல்லை, பசியின்மை போன்ற அனைத்து வயிற்றுக் கோளாறுகளுக்கும் ஏற்றது.

சர்க்கரை நோய்க்கு ஏற்ற உணவு. பித்த வாந்தி, மலச்சிக்கலை நீக்கும்.

மூட்டுவலி, மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம், சிறுநீரகப் புண், சிறுநீரகக் கற்கள், நரம்பு வலிகள், ஆஸ்துமா, அலர்ஜி, ஆண்மைக் கோளாறுகளுக்கு குணமாக்க ஏற்றது

source:http://www.indusladies.com/

1 மறுமொழி

  1. Krishnaamma சொன்னது,

    மே 25, 2009 இல் 10:28 பிற்பகல்

    Hi I am so happy to see my article here. :)
    Krishnaamma


மறுமொழியொன்றை வழங்குக