கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே
அந்த மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்
(கண்ணன் மனம் என்னவோ)
கானத்தில், குழல் நாதத்தில்,
ஒரு கந்தர்வ லோகத்தில் எனைக் கொண்டு சேர்ப்பான்!
மோனத்தில், அந்தி நேரத்தில்,
அவன் முந்நூறு முத்தங்கள் ஒன்றாகக் கேட்பான்!
கார் கூந்தல் தனை நீவுவான்
அதில் கல்யாண சுகம் தேடுவான்
அந்தக் கணத்தில், என் உதட்டில், தன் உதட்டால், முத்தெடுப்பான்.
வானம் எந்தன் காலில் வந்து கோலம் போடாதோ….
(கண்ணன் மனம் என்னவோ)
மோகத்தில், விழி ஓரத்தில்,
கண்ணன் பார்த்தாலும் என் நெஞ்சில் பசி ஆறிப் போகும்
காமத்தில், நடு ஜாமத்தில்,
இமை மூடாத என் கண்ணில் நதி ஓடிப் பாயும்
மை கூட கரைகின்றதே
இன்று பன்னீரும் சுடுகின்றதே
அந்தி இருட்டில் என் விழிக்குள் நின்றிருப்பான் – கண்மணிக்குள்
இங்கும் அங்கும் எங்கும் காதல் கண்ணன் கோலங்கள்!
(கண்ணன் மனம் என்னவோ)
படம்: வசந்தராகம்
குரல்: S.ஜானகி
வரிகள்:
இசை: M.S. விஸ்வநாதன்
—————————————————————————————————————————————————————————–
மயூரி புகழ் சுதா சந்திரன் பல நடனப் பாடல்கள் ஆடியிருக்காங்க. அதுல ஒரு கண்ணன் நடனப் பாட்டு இன்னிக்கு! மெல்லிசை மன்னர் MSV இசையில் ஜானகியம்மா, அவுங்களுக்கே உரிய ரொமாண்டிக் குரலில் பாடின பாட்டு!
இந்தப் பாட்டுக்கு பல தனிக் கச்சேரிகளிலும் மவுசு. தனி மேடைகளில் இந்தப் பாட்டுக்குப் பரதமும் ஆடியிருக்காங்க பொண்ணுங்க!
