இந்தக் கண்களிரண்டும்
இளைஞிகளைக் கண்டவுடன்
யாஹூ என்றே மெயில் அனுப்புகிறது
இதயத்துக்கு….
பெரும்பாலும் வைரஸ்களுடன்….
குறுக்குவழி:
எரிந்து விழுந்த சாம்பலில்
உயிர்த்தெழுந்த பீனிக்ஸ் பறவை ஒன்று
அண்டமும் உருண்டைதான் என்று
யாரோ சொன்னதைக்கேட்டு
எதிர்ப்பதமாய் பறந்தது
சூரியனின் முதுகு சுடாதென்று…
source:http://puravee.blogspot.com/2006/10/blog-post_116219098854806528.html
