ஹைகூ…(குறும்பாய் குறும்பா….) : துரை.ந.உ

1)நோயாளி :
இரவில் நடக்கும் வியாதி
இன்னும் சரியாகவில்லை
நிலாவுக்கு
————————————————————————————————-
2) ஏன் ? :
தூண்டிலில் சிக்கவே இல்லை
குளத்துக்குள் நீந்திக்கொண்டே
இருக்கும் : மேகம்
—————————————————————————————————-

3)மின் தடையால் :


நகரஇரவில் மின்தடையில்
தெளிவாகத் தெரிகின்றன :
நட்சத்திரங்கள்


என்றும் அன்புடன்
–  துரை

————————————————————————————————

நன்றி;

http://duraikavithaikal.blogspot.com

அம்மா என்பது தமிழ் வார்த்தை…

அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

கவலையில் வருவதும் அம்மா அம்மா
கருணையில் வருவதும் அம்மா அம்மா
தவறு செய்தாலும் மன்னிப்புக்காக
தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் தமிழ் வார்த்தை

பூமியின் பெயரும் அம்மா அம்மா
புண்ணிய நதியும் அம்மா அம்மா
தாரணி அழைப்பதும் அம்மா அம்மா
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
அம்மா என்பது தமிழ் வார்த்தை

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

——————————————————–

Selected Kannadasan Songs

நன்றி;

http://www.tamilnation.org/literature/kannadasan/ammaenbathuthamizh.htm


என்னுடையதல்ல…



புத்தர் தன் பிரயாணத்தின் போது ஒரு கிராமத்தை வந்தடைந்தார்.
அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் மத போதகர்கள்.

புத்தரை, அவருடைய போதனைகளை வெறுப்பவர்கள்.எனவே
ஆனந்தா என்ற அவருடைய பிரதான சீடர் அந்த வழியாக
செல்ல வேண்டாம் என்றார்.

ஆனால் புத்தர் அதை மறுத்து அந்த வழியாக சென்றார்.
அவர் ஊருக்குள் நுழைந்ததுமே அந்த மதவாதிகள் அவரை சூழ்ந்து
கொண்டு கண்டபடி திட்ட ஆரம்பித்தனர். ஆனால் புத்தரோ எவ்வித
சலனமும் இன்றி அந்த இடத்தை விட்டுச் சென்றார்.அந்த ஊரைக்
கடந்ததும் இளைப்பாற ஓரிடத்தில் தங்கினர். ஆனந்தாவால் பொறுக்க
முடியவில்லை “குருவே ! அவர்கள் உங்களை எந்த அளவு கேவலமாக
பேசி விட்டனர்,நீங்கள் அவர்களோடு சண்டையிட வேண்டாம்
குறைந்த பட்சம் மறுப்புத் தெரிவித்து ஏதாவது சொல்லி விட்டு
வந்திருக்கலாமே”என்றார்.

புத்தர் அமைதியாக தான் பிச்சை எடுக்கும் திருவோட்டைக் காட்டி
“ஆனந்தா! இது யாருடையது?” என்றுகேட்டார்.

“இது உங்களுடையது”

“இல்லை இது உன்னுடையது ,இதை நான் உனக்கு கொடுத்து விட்டேன்”

என்றார்.சிறிது நேரம் சென்றதும் மீண்டும்”ஆனந்தா!இது யாருடையது ?”
என்று கேட்டார்.

“இது என்னுடையது ஸ்வாமி!”

“எப்படி ? இது என்னுடையது என்று சொன்னாயே?”

“ஸ்வாமி!இதை நீங்கள்தான் எனக்கு கொடுத்தீர்கள்.நான் அதை ஏற்றுக்
கொண்டதால் இது என்னுடையதாயிற்று”என்றார்.

“ஆம் , நான் கொடுத்ததை நீ ஏற்றுக் கொண்டதால் அது உன்னுடையதாயிற்று ,
அவர்கள் என்னைக் குறித்துச் சொன்னவைகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை
,எனவே அவை என்னுடையதல்ல”என்றார்.

————————————————————-

Posted by ஸ்ரீதர்
http://sridharrangaraj.blogspot.com

கண்ணீரின் ரகசியம்

கவிக்கோ அப்துல் ரஹ்மானின்
ஆலாபனை என்ற தொகுதியிலிருந்து

———————————————————————————————————

tears

’இறைவா எனக்குப்
புன்னகைகளைக் கொடு’ என்று
பிரார்த்தித்தேன்

அவன் கண்ணீரைத் தந்தான்

‘வரம் கேட்டேன்
சாபம் கொடுத்து விட்டாயே’
என்றேன்

இறைவன் கூறினான்:

‘மழை வெண்டாம்
விளைச்சலை மட்டும் கொடு’ என்று
எந்த உழவனாவது கேட்பானா’

ஆனால் நீ
அப்படித்தான் கேட்கிறாய்

கண்ணிரில் புன்னகையும்
புன்னகையில் கண்ணீரும்
ஒளிந்திருப்பதை
நீ அறிய மாட்டாய்

உண்மையைச் சொல்வதானால்
கண்ணீர் கண்களின் புன்னகை
புன்னகை இதழ்களின் கண்ணீர்’

வைகறைப் பொழுதில் மலர்களின் மீது
பனித்துளிகளை
நீ கண்டதில்லையா?

புன்னகை
தன்னைக் கண்ணீரால்
அலங்கரித்துக் கொள்ளும்
அற்புதம் அல்லவா அது!

மழை மேகங்களில்
மின்னல் உதிப்பதை
நீ பார்த்ததில்லையா?

கண்ணீரில் இருந்து
சிரிப்புப் பிறக்கும்
அழகல்லவா அது?

முத்து என்பது என்ன?
சிப்பிக்குள் இருந்து
தவம் செய்யும் கண்ணீர்த் துளி
புன்னகையாகும் அதிசயம் தானே அது

கன்ணீரில் மலரும்
புன்னகைப் பூக்கள்
வாடுவதில்லை என்பதை
அறிவாயாக!

மேலும்
கண்ணீர்தான்
உன்னைக் காட்டுகிறது

புன்னகையோ
சில நேரங்களில்
உனக்கு திரையாகிவிடுகிறது

————-

நன்றி;

Posted by nagoori

http://kavikko.wordpress.com/2009/02/13

புரட்சிகரமான அறுவைச் சிகிச்சை. . .

—-

புரட்சிகரமான அறுவைச் சிகிச்சை மூலம் பார்வையை மீளப்பெற்ற நபர்

பார்வையிழந்த நபரொருவருக்கு அவரது முரசினூடாக மேற்கொண்ட புரட்சிகரமான அறுவைச் சிகிச்சை மூலம் பார்வையை மீளப்பெறச் செய்து பிரித்தானிய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

மார்ட்டின் ஜோன்ஸ் (42 வயது) என்ற இந்த நபர், 12 வருடங்களுக்கு முன் உலோகப் பட்டறையொன்றில் பணியாற்றுகையில் உருகிய அலுமினியத்தைக் கொண்ட குழாயொன்று வெடித்துச் சிதறியதில் பார்வையை முற்றுமுழுதாக இழந்தார்.

இந் நிலையில், அவரைப் பராமரிக்க நியமிக்கப்பட்ட பெண்ணான கில்லை (50 வயது) நான்கு வருடங்களுக்கு முன்னர் மணந்தார்.

விபத்து நடைபெற்ற போது 600 பாகை செல்சியஸ் வெப்பநிலையிலிருந்த திரவ அலுமினியம் வெடித்துச் சிதறியதில் அவருக்குப் பாரிய எரிகாயங்கள் ஏற்பட்டன. 23 மணி நேரம் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அவரது இடது கண் முற்றாக அகற்றப்பட்டது. அவரது வலது கண் அகற்றப்படாத போதும் அது பார்வைப்புல ஆற்றலை இழந்திருந்தது.

இந் நிலையில் மருத்துவர்கள் மார்ட்டினின் பற்களில் ஒன்றை அகற்றி, முரசினூடாக சிறிய துளை இட்டு விசேட பார்வை வில்லைகளை அவரது வலது கண்ணில் பொருத்தி அவருக்கு அக் கண்ணிலான பார்வைப் புலத்தை மீளக் கிடைக்கச் செய்துள்ளனர். அத்துடன் அவரது அகற்றப்பட்ட பல்லும் வெற்றிகரமாக மீளவும் உரிய இடத்தில் பொருத்தப்பட்டது.

இது தொடர்பில் மார்ட்டின் விபரிக்கையில்,

“நான் குருடாக இருந்தபோதே எனது மனைவியைச் சந்தித்தேன். அவர் முகத்தைப் பார்க்கவேண்டுமென்பதே எனது தீவிர ஆவலாக இருந்தது. மருத்துவர்கள் கண் கட்டை அவிழ்த்ததும் எதிரே நின்ற அவரை (மனைவியை) பார்க்க முடிந்தது. என்னால் நம்ப முடியவில்லை. கில் மிகவும் அழகாக இருக்கிறார். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி உணர்வை விபரிக்க வார்த்தைகளில்லை” என்று கூறினார்.
—————————————————-
(நன்றி)

Posted by எம்.ரிஷான் ஷெரீப்


www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk

ரோஜாப்பூ கவிதை…

ரோஜாப்பூக்கள் உனக்குப் பிடிக்குமென்று
தெரிந்தும் மல்லிகைப்பூக்கள்
மட்டும் வாங்கிவருகிறேன்..

ஆசையுடன் பிரித்துப் பார்த்துவிட்டு
ரோஜாக்கள் எங்கே என்று
பார்வையால் கேட்கிறாய் நீ..

உலகின் மிக அழகிய ரோஜாக்கள் இவைதான்
என்று சொல்லி உன் கன்னம் கிள்ளுகிறேன்..
வெட்கத்தில் பூத்து நிற்கிறாய் ரோஜாவாய்.

அழகிய புடவையொன்றில் என் முன் நின்று
எப்படி இருக்கிறேன் என்கிறாய் நீ.
உன் கூந்தலில் ஒரு ஒற்றை ரோஜாவை சூடி
விட்டு நம் காதல்செடியில் ரோஜா
மலர்ந்திருக்கிறது என்கிறேன் நான்.

பவித்திரமானதொரு புன்னகையை
சிந்துகிறாய் தரையெங்கும்
மல்லிகைபூக்கள் சிதறுகின்றன…

நீ ஆசையாய் வளர்த்த சிறுரோஜாசெடி
வாடிப்போனது.. துடித்துப்போனாய் நீ.
உனக்கென புதிதாய் ஒரு செடி வாங்கி வந்தேன்

சட்டென்று பூத்து சிரிக்கிறாய் செடி கண்டவுடன்.
உன் மெல்லிய மனம் கண்டு,
நீ பெண்ணா இல்லை பூவா என்று புரியாமல்
தவிக்க ஆரம்பிக்கிறேன் நான்.

*****************************************
இடுகையிட்டது TAMILAN

நன்றி; http://sssuresh-tamilan.blogspot.com/2009/03/blog-post_27.html

அழகு மெஹந்தி டிசைன்

இந்த டிசைன் மெஹந்தியினை மணப் பெண்களுக்கும் மட்டுமல்ல தோழிகளும் போட்டு அழகு பார்க்கலாம்.

Posted by Mrs.Faizakader

நன்றி; http://azurilbeautycorner.blogspot.com/2009/06/blog-post_27.html

எவரையும் ஏளனம் நீ செய்யாதே!

குழந்தைகளுக்கான பாடல்

மனிதர் வெறுக்கும் சேற்றிலே
மலர்ந்து நிற்கும் தாமரை;
புனிதமான கடவுளை
பூசை செய்ய உதவுதே!

அழுக்கடைந்த சிப்பியில்
அழகு முத்தைக் காணலாம்;
கழுத்தில் நல்ல மாலையாய்
கட்டி மகிழ உதவுதே!

கன்னங்கரிய குயிலிடம்
காது குளிரும் கீதமோ;
இன்பம் இன்பம் என்றுதாம்
இன்னும் கேட்க செய்யுதே!

விசத்தில் மிக்க பாம்பிடம்
விலையுயர்ந்த இரத்தினம்;
அடடா அந்த இரத்தினம்
மனிதருக்கும் கிட்டுமோ?

ஊசி போன்ற முள்ளிலே
உயர்ந்த ரோசா மலருதே;
வீசி நல்ல மணத்திலே
விரும்பி அணிய செய்யுதே!

மோசமான இடத்திலும்
மிகுந்த நல்ல பொருளுண்டு;
யோசிக்காமல் எவரையும்
ஏளனம் நீ செய்யாதே!

Posted by தமிழ்

நன்றி; http://jcet.blogspot.com/2008/03/blog-post_26.html

நெத்தியடி அடிக்கும் நெட் கவிதைகள்

என்னவளே. . .நடுநிலையான
தீர்ப்பு வழங்கு….
உன்னை பின் தொடர்வதில் யாருக்கு முதலிடம்
எனக்கா உன் நிழலுக்கா?

————————————————

சகுனம் பார்க்கும் கணவனிடம்
எப்படித் தெரிவிப்புது
பூனை வளர்க்கும் ஆசையை!

————————————————

ஒரு கொசு உயிரை விட்டது
ஜீவகாருண்யம்
புத்தகத்தில்!

————————————————————————–
நன்றி; இதயம் (மலேசியாவின் தேசிய மாத இதழ்)
ஏபரல் 2004

இந்திய நண்டு மேலே ஏறாது!

Callinectes sapidus

நண்டுகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று கூடைகளில் நண்டுகளை ஏற்றி அதை கப்பல்களில் அனுப்புவது வழக்கம்
.அந்த ஒவ்வொரு கூடைகளிலும் எந்த நாட்டை சேர்ந்த நண்டுகள் என்ற பெயரும் எழுதி இருக்கும்.

இது போலவே ஓரு முறை நண்டுகள் ஏற்றி அனுப்பப்பட்டது
.சிறிது நேரம் கழித்து அந்த கப்பல் தளத்தில் இருந்து ஒரு செய்தி அந்த நிறுவனத்துக்கு வந்தது.நண்டு கூடைகள் எல்லாம் சரியாக மூடி அனுப்பப்பட்டு இருந்தது.ஆனால் ஒரே ஒரு கூடை மட்டும் திறந்த நிலையில் அனுப்பப்பட்டு உள்ளதாகவும்,அவைகள் உள்ள நண்டுகள் வேளியே வந்துவிடும் வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அதிகாரி பதட்டத்துடன் சொன்னார்.

உடனே நிறுவன மேனேஜர் அந்த அதிகாரியிடம்
“சார் திறந்திருக்கும் கூடை எந்த நாட்டுடைய நண்டுகள் என்பதை அதில் இருக்கும் பெயரைப் பார்த்து சொல்லுங்கள்.

அந்த அதிகாரி அந்த கூடையில் உள்ள பெயரை பார்த்து சொன்னார்
“இந்தியா” என்று

உடனே அந்த நிறுவன மேனேஜர்
:அப்பாடா இப்பொழுதுதான் உயிரே வந்தது.சார் நீங்கள் எந்த கவலையும் படவேண்டாம்.அந்த நண்டுகள் வெளியே வராது என்றார்.

அந்த அதிகாரிக்கு கோபம் வந்தது
;என்ன சொல்லுகிறீர்கள்.திறந்திருக்கும் கூடையில் இருக்கும் நண்டுகள் எப்படி வெளியே வராமல் இருக்கும்.?

நிறுவன மேனேஜர்
;சார் கோபபடாதீர்கள்.திறந்திருக்கும் கூடையில் இருப்பவை இந்திய நண்டுகள்.கண்டிப்பாக வெளியே வர முயற்சி செய்யும்.மேலே வரை வரும்.ஆனால் கீழே இருக்கும் நண்டு சும்மா இருக்காது.மேலே ஏறும் நண்டின் காலை பிடித்து இழுத்து விட்டு இது மேலே ஏறும்.இன்னொன்று இதன் காலை பிடித்துவிட்டு அது தான் மேலே ஏற முயற்சிக்கும்.ஆக மொத்தம் எந்த நண்டும் கூடையை விட்டு வெளியே வராது.ஏன் என்றால் இந்திய நண்டுகள் எப்பவுமே சுயநலம் தான் என்றார்.

அந்த அதிகாரி
:!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!

—————————————————–

Posted by ஆந்தையார் at

நன்றி; http://aanthaiyaar.blogspot.com/2008/04/blog-post_07.html

« முந்தைய இடுகைகள் அடுத்த பக்கம் » அடுத்த பக்கம் »